கம்பராமாயணம் 543 - a podcast by Jaya Ram

from 2023-10-26T04:42:36

:: ::

கம்பராமாயணம்...

கும்பகருணனின் இரு கைகளும் அறுபடுதல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - கும்பகருணன் வதைப் படலம்.

பாடல் எண் - 543

நாள் - ஐந்நூற்று நாற்பத்து மூன்றாவது நாள்.

மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ
மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது
பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால்
எடுத்து அவன் ஆர்த்து ஓடி
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின
வானரக் குலம் எல்லாம்?.

விளக்கம் - மிக்கு எழுந்து வளர்ந்த அழகிய தோளுடன் அறுபட்ட வீழ்ந்த வலக்கையை அறுபடாது உள்ள கொடுமையான இடக்கையினால் எடுத்துக் கொண்டு அக்கும்பகருணன் பேரொலி எழுப்பிக் கொண்டு ஓடி அடித்ததால் பல்லை இளித்துக் கொண்டு ஓடின குரங்கு கூட்டங்கள் எல்லாம் உயிரொழிந்து வீழ்ந்தன இவ்வாறு வீரப் போரிட்ட இவனிடத்து வீரத்தை இரந்து பெற்றவர்கள் ஆம், தவிரப் பிறர் வீரர்களாக வேறு பிறந்தவர் உளர் என்று சொல்லுதல் எளிமையானதோ அன்று.

கு. பாஸ்கர்.... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram