கம்பராமாயணம். 554 - a podcast by Jaya Ram

from 2023-11-05T06:18:13

:: ::

கம்பராமாயணம்..

சீதை இராவணனிடம் பேசுதல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - மாயா சனகப் படலம்.

பாடல் எண் - 554

நாள் - ஐந்நூற்று ஐம்பத்து நான்காவது நாள்.

புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்..

விளக்கம் - அற்ப மகனே கேட்பதற்கு உரியனவற்றை மீண்டும் கேட்பாய், எதிர் வர உள்ள போரில் உன் மகனுடைய உயிரை எமது தாயாகிய சுமித்திரை ஈன்ற நற்பண்புகள் உடைய மகனாகிய இலக்குவன் அம்புகள் பட்டு அழித்தலால் அவனுடைய உயிரற்ற உடலை நாய்கள் நக்கும் போது என் மகன் இறந்து பட்டானே என்று சொல்லிக் கொண்டு நீ பெரும் குரல் எழுப்பி புலம்புதல் ஆகும் என்று கூறினாள் சீதை..


கு. பாஸ்கர்..... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram