கம்பராமாயணம் 558 - a podcast by Jaya Ram

from 2023-11-10T11:35:01

:: ::

கம்பராமாயணம்...

இராவணன் தன்னைத் தானே இகழ்தல்..


காண்டம் - யுத்த காண்டம்..

படலம் - மாயா சனகப் படலம்

பாடல் எண் - 558


நாள் - ஐந்நூற்று ஐம்பத்தெட்டாவது நாள்.


நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இந் நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும்..


விளக்கம் - என் தம்பியர்கள் பார்பதற்கு கூட இல்லாமல் இறந்து படவும், இந்த இலங்கை எளிதாக பகைவர் கையில் பட்டு விடவும், மாமனாகிய மாரீசன் இறக்கவும், என் பின் பிறந்த சூர்ப்பனகை மூக்கை இழக்கவும், ஒரு பெண்ணின் முலையிடத்து கொண்ட ஆசையால் தாழ்ந்தேன் மானம் இன்றி இன்னும் உயிருடன் வாழ்கின்றனர் வாழ்கின்றேன், உன்னை இழந்தும் இன்னும் உயிருடன் இருக்க மாட்டேனோ?.


கு. பாஸ்கர்.... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram