கம்பராமாயணம் 571 - a podcast by Jaya Ram

from 2023-11-23T14:55:29

:: ::

கம்பராமாயணம்...

தானிய மாலி இராவணனிடம் பேசுதல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 571

நாள் - ஐந்நூற்று எழுபத்தொன்றாவது நாள்.

உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகருணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐய.

விளக்கம் - அறிவு உடையவனாகிய உன் தம்பி வீடணன் கூறிய சொற்களை கேளாதவனாயும், ஆடவரிற் சிறந்த குலத்தவனாகிய மாலியவான் கூறிய சொற்களில் நன்மையை எண்ணாதவனாயும் இருந்து பகைவர் கையால் கும்பகருணனைக் கொல்வித்து, என் சிறந்த மகனாகிய அதிகாயன் அம்புக்கு இரையாக கொடுத்து அரசு புரிந்தாய்..

கு. பாஸ்கர்.... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram