கம்பராமாயணம் 584 - a podcast by Jaya Ram

from 2023-12-08T01:51:09

:: ::

கம்பராமாயணம்..

கருடன் இராமனைத் துதித்தல்..


காண்டம்-யுத்த காண்டம்.

படலம்-நாகபாசப் படலம்.


பாடல் எண்.584

நாள் -ஐந்நூற்று எண்பத்து நான்காவது நாள்.


வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி
அவை எய்தி என்றும் விளையா
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி
அறியாமை நிற்றி மனமா
முனைவர்க்கும் ஒத்தி ,அமரர்கும் ஒத்தி,
முழுமூடர் என்னும் முதலானோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இல்
அதிரேக மாயை அறிவார் ?.


விளக்கம்.

உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய இரு வினைகளுக்கு தகுந்தவாறு அந்த உயிர்களை உடனே தக்க உடல் எடுக்கச் செய்து அந்த உடம்புகளை அடைந்து உன் திருவடிகளையே நினைக்கும் பக்தர்களுக்கு எப்போதும் அவர்கள் மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி அறியாமல் நிற்கின்றாய் , முனிவர்களுக்கும் , தேவர்களுக்கும் மனமாக விளங்குகிறாய் ,முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறருக்கும் அறியமுடியாதவனாக இருக்கிறாய் இந்த மாயச் செயலைச் யார் அறிவார்....


கு.பாஸ்கர் ... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram